பல கோடி செலவில் சொந்தமாக தீவு வைத்திருக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா

Bollywood Indian Actress Actress Jacqueline Fernandez
By Kathick Aug 30, 2024 09:30 AM GMT
Report

இப்போது இருக்கும் கால கட்டத்தில் தனக்கென ஒரு சொந்த வீடு வைத்திருப்பது மிகவும் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் சில பணக்காரர்கள் தனக்கென ஒரு தனி தீவை சொந்தமாக்குவதை ஒரு டிரெண்டாக்கி வருகின்றனர்.

பல கோடி செலவில் சொந்தமாக தீவு வைத்திருக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா | Popular Bollywood Actress Owns Private Island

அந்த வகையில், சினிமா நட்சத்திரங்களும் சிலர் தனக்கென சொந்தமாக தீவு வாங்கி வைத்துள்ளனர். இதில், பாலிவுட்டில் நடிக்கும் ஒரு நடிகை தனக்கென ஒரு தீவை சொந்தமாகியுள்ளார். அவர் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்ற முன்னணி நடிகை இல்லை.

பல கோடி செலவில் சொந்தமாக தீவு வைத்திருக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா | Popular Bollywood Actress Owns Private Island

ஆனால் பாலிவுட் சினிமாவில் 15 ஆண்டுகளாக பணியாற்றி மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். அது வேறு யாருமில்லை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.

பல கோடி செலவில் சொந்தமாக தீவு வைத்திருக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா | Popular Bollywood Actress Owns Private Island

இவர் ஹவுஸ்ஃபுல் 2 வெற்றி படத்திற்கு பிறகு சுமார் 600 ஆயிரம் டாலர்களை செலவு செய்து ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். மேலும், அந்த தீவில் ஒரு ஆடம்பர பங்களா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.