அஜித் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டார்.. கமல் பட தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

Ajith Kumar Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 29, 2023 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித். தற்போது தடம் படம் இயக்குனர் மகிழ்திருமேனி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று தகவல் வந்துள்ளது.

கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், நடிகர் நல்ல நடிகர், அவர் நிஜ வாழ்க்கையிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். முதலில் அவர் மனுஷனா வாழ வேண்டும். அஜித் என்னிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டார். அந்த சமயத்தில் என்னிடம் ஆதாரம் இல்லை ஆனால் இப்போது ஆதாரம் இருக்கிறது. அஜித் காசு கொடுத்து தான் புகழை வாங்குகிறார் என்று கூறியுள்ளார்.