முதல் சந்திப்பிலேயே மோசமான வன்கொடுமை முயற்சி செய்தார்!! பாப் பாடகர் மீது 2 இளம்பெண் புகார்..
பாப் பாடகர் வேடன்
கேரள மாநிலத்தில் திருச்சூரில் பிறந்த பாப் பாடகர் வேடன், மிகப்பெரியளவில் புகழ்பெற்றார். இதனையடுத்து 2020ல் வேடன் வெளியிட்ட வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ் ஆல்பம் பெரியளவில் பேசப்பட்டு 2021ல் உலகில் பாடலாசிரியராகவும் பாடகராக பயணத்தை தொடங்கி மஞ்நுமல் பாய்ஸ் படத்தில் அவர் பாடிய பாடல் மிகப்பெரியளவில் பேசப்பட்டு வந்தது.
இளம்பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். 2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் தன்னுடன் நட்பில் இருந்த வேடன், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல முறை பாலியல் உறவு கொண்டதால புகாரளித்தார். இதனடிப்படையில் எர்ணாக்குள தீர்க்ககரா காவல் நிலையத்தில் அவர் மீது பி என் எஸ் சட்டப்பிரிவு 376ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2 இளம்பெண் புகார்
இந்நிலையில், தலைமறைவாக உள்ள வேடனை போலீஸ் தேடி வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளனர்.
அதில் ஒரு பெண், 2020ல் ஆதிவாசி மக்கள் தொடர்பாக உதவி கேட்டபோது வேடன் உடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது எர்ணாகுளம் குடியிருப்புக்கு தன்னை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முதல் சந்திப்பிலேயே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வேடன் முயற்சித்தார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மற்றொரு பெண், சங்கீத கலைஞரான தன்னை தேடி வந்து வேடன் பழக்கம் ஏற்படுத்தியதாகவும் தொடர்ந்து தன்னை 2021ல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியதால் கேரள முதல்வர் அலுவலக மாநில காவத்துறை, வேடன் மீது வந்த புகாரை ஏற்று விசாரித்து வருகிறார்கள்.