பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது... போட்டோ பாருங்க
Tamil TV Serials
By Yathrika
கண்மணி
கண்மணி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல சீரியல் நடிகை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியின் தங்கையாக நடித்தவர், அந்த தொடரில் இருந்து பின் பாதியிலேயே வெளியேறினார்.
ஜீ தமிழ் பக்கம் வந்தவர் நாயகியாக அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் நடித்து முடித்தார்.
கடந்த ஆண்டு பிரபல தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்தவருக்கு நேற்று ( ஜுன் 8) ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மகனின் புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.