2026ல் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கிய லிஸ்ட்டில் டாப் 1ல் ஷிவ் நாடார்..

Bajaj Mukesh Dhirubhai Ambani Gautam Adani Shiv Nadar
By Jai Nov 21, 2026 07:32 AM GMT
Report

அதிக நன்கொடை

இந்தியாவில் அதிக நன்கொடை கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அந்தவகையில் இந்த வருடம் இந்த பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருந்த அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி இதில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

டாப் 1

இந்தியாவில் அதிக நன்கொடை அளித்த பெரும் பணக்காரர்கள் பட்டியலின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தினை பிடித்த ஹெச்.சி.எல் (HCL) நிறுவனங்களின் தலைவரான ஷிவ் நாடார் குடும்பம் 2026 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 2,953 கோடி வரை பல சமூக நலப்பணிகளுக்காக செலவு செய்துள்ளார்கள்.

2026ல் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கிய லிஸ்ட்டில் டாப் 1ல் ஷிவ் நாடார்.. | Position As India S Most Generous Shiv Nadar No1

இப்பட்டியலில் 2வது இடத்தை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் கவுதம் அதானி இடம் பிடித்திருக்கிறார். முந்தைய ஆண்டைவிட 127 சதவீதம் அதிகமாக நன்கொடை, சமூக நலப்பணிகளுக்கு அதானி செலவிட்டு 2வது இடத்தை பிடித்துள்ளார். அவர் செலவிட்ட தொகை ரூ. 877 கோடியாகும். இந்தியாவில் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி, விமான நிலைய பராமரிப்பு என்று உள்கட்டமைப்பு திட்டங்களில் கொடிக்கட்டி பறந்து வரும் அதானி குழுமம், குஜராத்தை பூர்வீகமாக கொண்டு சுமார் 7.85 லட்சம் கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்.

2026ல் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கிய லிஸ்ட்டில் டாப் 1ல் ஷிவ் நாடார்.. | Position As India S Most Generous Shiv Nadar No1

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, ரூ. 8.50 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரீடெய்ல் முதல் தொலைத்தொடர்புத்துறை என்று பல துறைகள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள். நன்கொடை அதிகம் அளித்த இந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி ரூ. 620 கோடி செலவிட்டு 3வது இடத்தில் வகித்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு 1 சதவீதம் பொதுப்பணிக்காக செலவிட்டு 4வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

இந்தியாவில் அதிக நன்கொடை கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியலில் 3வது இடத்தில் பஜாஜ் குழுமம் பிடித்துள்ளது. 42 சதவீதம் அதிகமாக பொதுப்பணிகளுக்காக பஜாஜ் குடும்பம் செலவிட்டுள்ளது. மொத்தம் ரூ. 632 கோடி வரை பஜாஜ் குடும்பம் இதில் செலவிட்டுள்ளது.

ரூ. 11, 544 கோடி

இந்தியாவில் அதிக நன்கொடை கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல் லிஸ்ட்டில் 2026 நிதியாண்டில் 219 நன்கொடையாளர்கள் மொத்தமாக சேர்த்து ரூ. 11, 544 கோடி வரை சமூக பணிகளுக்காக செலவிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ரூ. 10,380 கோடி வரை இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.