என்னோட கார்-ஐ விஜய் காருன்னு சொன்னாங்க!! ஓப்பனாக பேசிய P.R. சுந்தர்..

Vijay Gossip Today Rolls-Royce
By Edward Jul 27, 2024 06:33 AM GMT
Edward

Edward

Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது புது பங்களா மற்றும் புதிய ஆபிஸ் வாங்கியும் குடியேறியதாக இணையத்தில் செய்திகள் கசிந்தது. தற்போது ஒரு தொழிலபதிர் விஜய் வீடு மற்றும் அவர் வாங்கிய கார் பற்றிய தகவல்களை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

என்னோட கார்-ஐ விஜய் காருன்னு சொன்னாங்க!! ஓப்பனாக பேசிய P.R. சுந்தர்.. | Pr Sundar Open Vijay Rolls Royce Car News Viral

மேன்சன் கன்சல்டன்சி-யின் மேலாண்மை இயக்குனரான பி ஆர் சுந்தர், சமீபத்திய பேட்டியொன்றில் பட்டினப்பாக்கத்தில் இருக்கும் பெண்ட் அவுஸில் நான் ஒரு பங்களா வாங்கியிருக்கிறார். அதே இடத்தில் 9வது மாடியில் விஜய் வாங்கி குடியேறியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், விஜய் வாங்கிய பிளாக் கலர் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்று அவரும் வாங்கியிருக்கிறார். அது பற்றியும் பகிர்ந்துள்ள பி ஆர் சுந்தர். துபாயில் இருந்து கார் சென்னைக்கு வந்ததும் சென்னை கஸ்டம்ஸில் கிளரிங் பண்ண வேண்டும். ஒரு ஏஜெண்ட் மூலமாக வாங்கியதால் கிளரிங் பண்ண என்னை வரச்சொன்னார்கள்.

என்னோட கார்-ஐ விஜய் காருன்னு சொன்னாங்க!! ஓப்பனாக பேசிய P.R. சுந்தர்.. | Pr Sundar Open Vijay Rolls Royce Car News Viral

அங்கிருந்த ஒருவர் என்னுடைய ஏஜெண்ட்டிடம், இது நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தானே என்று கேட்டார். விஜய் கார் இல்லை, என்று என்னை கைக்காட்டி அவர் தான் வாங்கினார் என்று கூறியிருக்கிறார். அவர் அப்பவும் நான் வாங்கினேன் என்று நம்பாமல் என்னை டிரைவர் என்றும் கூறினார்.

விலையுயர்ந்த கார் வாங்கினால், சினிமா, அரசியல் பிரபலங்கள் தான் வாங்குவார்களா, என்னை போல் பங்குச்சந்தை வாங்குபவர்கள் வாங்கமுடியாது என்று சாதாரண மக்கள் நினைக்கிறார்கள் என்று பி ஆர் சுந்தர் தன் வளர்ச்சி பற்றி பகிர்ந்துள்ளார்.