பொம்ம பட டீசர் மாதிரி இருக்கு.. ஆதிபுருஷ் இயக்குனரால் கோபத்தில் கைநீட்டிய பிரபாஸ்

Viral Video Gossip Today Prabhas
By Edward Oct 06, 2022 01:17 PM GMT
Report

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்தார். மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடனும் 300ல் இருந்து 350 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

பிரபாஸ் கேரியரை சின்னாப்பின்னமாக்கிய இப்படத்தில் வாங்கிய 100 கோடி சம்பளத்தில் சிறு பங்கினை தயாரிப்பாளருக்கு அளித்தார் பிரபாஸ். இதையடுத்து இயக்குனர் ஓம் ரவுட் என்பவரின் ஆதிபுருஷ் என்ற 3டி படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகியது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகிய டீசர் பொம்மை படத்தின் டீசர் போன்றுள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அதிலும் 500 கோடி செலவில் பொம்மை படத்தை இயக்கியுள்ள இயக்குனரை கடுமையாக விமர்சித்து பாய்காட் ஆதிபுருஷ் என்ற ஹாஷ்டேக்கினையும் வைரலாக்கினர்.

இந்நிலையில் பிரபாஸ் ஆதிபுருஷ் டீசரை பார்த்து கடும்கோபத்துடன் அறைக்கு வருமாறு இயக்குனரை பார்த்து முரைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery