பிரபு தேவாவின் மகள் பெயர் நயன்தாராவா? உறுதிப்படுத்திய அவரின் நட்பு வட்டாரங்கள்!

Prabhu Deva Nayanthara Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 21, 2023 07:00 AM GMT
Report

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் எனப் பல முகங்களை கொண்டவர் தான் பிரபு தேவா. இவர் 1995 -ம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து பிரபு தேவா நயன்தாரா உடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த உறவும் அதிக நாள் நிலைக்கவில்லை.

கடந்த 2020 -ம் ஆண்டு எளிமையான முறையில் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிரபு தேவாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. இந்த விஷயம் முற்றிலும் பொய் என்று பிரபு தேவாவின் நட்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.