பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மகளை காதலிக்கும் டிக் டாக் பிரபலம்!! நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரல்

Actors Tamil Actors Tamil Directors Prabhu Solomon
By Dhiviyarajan Feb 20, 2024 04:29 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் பிரபு சாலமன். இவர் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

மைனா, கும்கி, செம்பி என மலைகிராம படங்களை மட்டும் இயக்கிய இவரின் அனைத்து படங்களும் வெற்றி பெற்றன. இயக்குனர் பிரபு சாலமனை விட சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தது அவரது மகள் ஹேசல் ஷைனி தான்.

இவர் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்தார். ஹேசல் ஷைனி விரைவில் சினிமாவிற்கு வருவார் என்று சில தகவல்கள் வெளிவந்தது.

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மகளை காதலிக்கும் டிக் டாக் பிரபலம்!! நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரல் | Prabhu Solomon Daughter Fall In Love

ஆனால் அதற்கு பிரபு சாலமன், "நான் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். அவர் சமூக வலைத்தளங்களில் டிக் டாக் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. இதெல்லாம் பண்ணக்கூடாது என அவளை திட்டி இருக்கிறேன்" என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஹேசல் ஷைனி தனது காதலரை சமூக வலைத்தளங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். ஹேசல் ஷைனியின் காதலரும் டிக் டாக் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.