உங்களுக்கு தான் ஐஸ்வர்யா! எனக்கு பப்பு தான்!! ஐஸ்வர்யா பற்றி பிரபுதேவா ஓப்பன் டாக்

aishwarya rajinikanth prabhudeva payani
By Edward Mar 12, 2022 05:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கடந்த 2004-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இயக்கம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து தனுஷை பிரியவுள்ளதாக அறிவித்தார். அதை அறிவித்த நாளில் இருந்து ரஜினி உள்ளிட பலர் அவருக்கு அறிவுரைகளை கூறி வந்தனர்.

இதுஒரு பக்கம் இருக்கையில், இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா Payani என்கிற காதல் ஆல்பத்தினை இயக்கி சில தினங்களில் வெளியிடவுள்ளார். அதற்கான புரமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா ஐஸ்வர்யா பற்றி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஹாய் பப்பு, அவர் உங்களுக்கு எல்லாம் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதுமே பப்பு தான். 9 வருடங்கள் கழித்து ஒரு சிங்கிள் உருவாக்கி இருக்கிறார். இப்போது எல்லாம் சிங்கிள் தான் ட்ரெண்ட். நான்கு மொழிகளில் செய்திருக்கிறார்." பப்பு (ஐஸ்வர்யா) ரொம்ப choosy. அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டாங்க.

அப்படிப்பட்ட ஒருவர் பண்றாங்க என்றால் கண்டிப்பாக சூப்பராக தான் இருக்கும். டெக்னீஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆட்கள். அதனால் சூப்பரா இருக்கும். என் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதற்கு ஐஸ்வர்யா நன்றி அண்ணா என்று பதிலளித்துள்ளார்.