ஒரேவொரு ஹிட் படம் தான்!! நன்றி கடனுக்காக தயாரிப்பாளர்களை வரிசையில் நிக்க வைக்கும் லவ் டுடே பிரதீப்
நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த படம் கோமாளி. இப்படத்தினை சிறு வயதில் இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே
இப்படத்தினை தொடர்ந்து தனக்கு வாய்ப்பே அளிக்காத தயாரிப்பாளர்கள் மத்தியில் கைகொடுத்து உதவியுள்ளனர் ஏஜிஎஸ் நிறுவனம். இந்த கூட்டணியில் சமீபத்தில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப். படமும் 60 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடம் மீண்டும் 2 படங்களில் பணியாற்ற பிரதீப் கையெழுத்திட்டுள்ளாராம். நன்றி கடனுக்காக 2 படங்கள் என்றால், அடுத்து ராக்போர்ட் முருகானந்தமிடம் ஒரு படமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படமும் அக்ரீமெண்ட் செய்து கையெழுத்து போட்டுள்ளார்.

அடுத்தடுத்து 4
மேலும் அவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை கைவசப்படுத்தி வரும் லைக்கா நிறுவனமும் பிரதீப்பை படம் பண்ண கேட்டுள்ளார்களாம். ஆனால் வாக்குறுதி கொடுத்ததோடு கையெழுத்திடாமல் காத்திருக்க சொல்லியுள்ளார்.
இப்படி அடுத்தடுத்து 4 க்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாக்கி வைத்திருக்கிறார் பிரதீப். என்னதா ஒரு படம் பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக இந்த விசயத்தை கையாலாமல் சகட்டுமேனிக்கு கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகிறார் பிரதீப் என்று கோடம்பாக்கத்தினர் கூறி வருகிறார்கள்.