மகள் உடலை சீரழித்து கொலை செய்துவிட்டார்கள்.. 20 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் தாயார்..
சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்பட்டு மன உளைச்சளால் சிலர் தற்கொலை செய்யும் நிலையும் உருவாகும் அப்படி இந்திய சினிமாவில் தற்போது தற்கொலை சம்பவங்கள் பிரபலங்களிடையே பல காணப்பட்டு சோகத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய முதல் படத்திலேயே பிரபலமாகி ஹிட் கொடுத்தவர் நடிகை பிரதியுக்ஷா.
1998 ஆரம்பித்த சினிமா வாழ்க்கை வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்றது. தன் காதலருடன் சேர்ந்து விஷம் குடித்து மரணமடைந்துள்ளார். ஆனால் காதலர் மருத்துவமனையில் உயிர் பிழைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என 4 வருடத்தில் 11 படங்களில் நடித்துள்ளார்.
2002 தற்கொலை செய்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய 16 வயதில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை 20 வயதில் மரணம் வரை அழைத்து சென்றுள்ளது. இதுபற்றி அப்போது இது தற்கொலை இல்லை என்று பின்னணியில் பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிரதியுக்ஷாவின் தாயார் சரோஜினி தேவி தனியார் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னுடைய மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவளை கற்பழித்து சீரழித்து கொலை செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார். பல நாட்களாக தன் மகளுக்கு தெலுங்கு மூத்த நடிகராலும், அரசியல்வாதிகளில் ஒருசிலராலும் தொல்லைகளை அனுபவித்து வந்துள்ளார் பிரதியுக்ஷா.

மேலும், போஸ்மார்ட்டம் ரிப்போட்டில் வேறு ஒன்றினை சித்தரித்து விட்டதாகவும், ஆனால் என் மகளின் உடம்பில் கீழல்களும், ஆணின் விந்தணு படர்ந்தும் காணப்பட்டது. என் மகளின் ஆடைகளை கூட என்னிடம் கொடுக்காமல் சென்று விட்டனர். பலர் என் மகளை கழ்பழித்து கழித்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்றும் புகாராக கூறியுள்ளார்.
இதை மூடி மறைத்து என் மகள் தற்கொலை செய்து கொண்டுதான் மரணமடைந்தார் என்று கூறி வழக்கை மூடிவிட்டனர். இப்படியான ஆதாரங்கள் இருந்து பணமில்லாததால் என்னால் தொடர்ந்து வழக்குகளை போட தெம்பில்லாமல் சென்று விட்டேன் என்று கூறி குற்றம் சாட்டி பேட்டியில் கூயியுள்ளார்.
மேலும் பிரதியுக்ஷா கல்லூரி படிப்பை பற்றியும் பேட்டியில் பகிர்ந்துள்ளார் அவரின் தாயார்.


