நடிகர் விஜயகுமார் மகள் வீட்டில் கோலாகலமாக நடந்த விசேஷம்.. மகிழ்ச்சியில் குடும்பம்

Preetha Vijayakumar Viral Photos Actress
By Bhavya Aug 09, 2025 01:30 PM GMT
Report

ப்ரீத்தா விஜயகுமார்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் ப்ரீத்தா. சந்திப்போமா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தர்மா, பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், காக்கை சிறகினிலே, அல்லி அர்ஜூனா, புன்னகை தேசம் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

நடிகர் விஜயகுமார் மகள் வீட்டில் கோலாகலமாக நடந்த விசேஷம்.. மகிழ்ச்சியில் குடும்பம் | Preetha Vijayakumar Photos Of Doing Poojai

மகிழ்ச்சியில் குடும்பம் 

இந்நிலையில், வரலட்சுமி பூஜையை முன்னிட்டு தனது வீட்டில் வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்துள்ளார் ப்ரீத்தா. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,