விஜய் நண்பர் சஞ்சீவ்-ஐ சுற்றும் பிரச்சனை!! ஓபனாக உடைத்து பேசிய மனைவி ப்ரீத்தி சஞ்சீவ்..
ப்ரீத்தி சஞ்சீவ்
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் குறித்து பல ஆண்டுகளாக பரவி வரும் வதந்திகள் மற்றும் ட்ரோல்கள் குறித்து அவரது மனைவி ப்ரீத்தி சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் ப்ரீத்தி, தன்னுடைய கணவர் சஞ்சீவ் மற்றும் விஜய் இருவரும் சிறு வயதில் இருந்தே நேருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இருந்தாலும் சஞ்சீவ், பொதுவெளியில் விஜய் குறித்து பேசும்போது சோசியல் மீடியாக்களில் ட்ரோல்கள் அதிகமாக வருகிறது. அவர், விஜய்யை பின்பற்றுகிறார், அவரைப்போல் நடிக்கிறார் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
சோசியல் மீடியா
ஆரம்பத்தில் இத்தனைய விமர்சனங்களை கவனித்து இருக்கிறேன், ஆனால் இப்போது எல்லாம் அதை கண்டுக் கொள்வதே இல்லை. சோசியல் மீடியாக்களை சஞ்சீவ் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அவரது சோசியல் மீடியா அக்கவுண்ட்டில் முக்கியமான பதிவுகளை நான் தான் போஸ்ட் போட்டுகிறேன்.

இதனால் சோசியல் மீடியாக்களில் வரும் நெகட்டிவ் கருத்துக்களை அவரை நேரடியாக பாதிக்கவில்லை. அவற்றை நானே பார்த்து வருகிறேன். உண்மை நிலை தெரியாமல் சிலர் தவறாக விமர்சிப்பது வருத்தளிக்கிறது என்று ப்ரித்தி சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.