சரத்குமார் மகளையும் விட்டுவைக்காத நடிகர் பிரேம்ஜி.. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா?

Varalaxmi Sarathkumar Premji Amaren
By Edward Sep 13, 2022 06:15 AM GMT
Report

காமெடி நடிகர்

கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம்.

42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டு ரியாக்ஷன்களை வெளியிட்டு வருவார்.

சரத்குமார் மகளையும் விட்டுவைக்காத நடிகர் பிரேம்ஜி.. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா? | Premgi Amaran React Varalakshmi Photoshoot Trolls

நடிகைகளுக்கு டூட் போடும் ரியாக்ஷன்

சமீபத்தில் கூட சங்கர் மகள் அதிதி, கீர்த்தி சுரேஷ், மாளவிகா உள்ளிட்ட பல நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்டு வந்த பிரேம்ஜி தற்போது சரத்குமார் மகள் வரலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. குண்டாக இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்து க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.

அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்து பார்க்கு ரியாக்ஷனை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா பரமா என்ற கருத்தினை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.