பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்க கூடாதுனு சொன்னேன்.. உண்மையை உடைத்த மாமியார்!!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் நடிகர் மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடகர் எனப் பல முகங்களை கொண்டவர்.
பிரேம்ஜியின் திருமண செய்தி வந்தவுடன் அனைவரும் அது ஏதேனும் படத்திற்கான பிரமோஷனாக இருக்கும் என தெரிவித்து வந்தனர். இந்த தகவல் உண்மைதான் என வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட பின்னரே பலரும் நம்பினார்கள்.
பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருக்கிய நண்பர்கள், சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
சமீபத்தில் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா, பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர்,
ஆரம்பத்தில் பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்த போது அவருக்கு, 'பொண்ணே கொடுக்கமாட்டேன்னு' சொன்னேன். அப்பறம் பார்த்தால் இப்படியொரு தங்கமான புள்ளையா இருக்கிறார்.
பிரேம்ஜி இடம் பிடித்த விஷயமே, அவர் எப்போதும் பெரியவங்களை ரொம்ப மதிப்பா நடத்துவார். நான் வீட்டில் எதாவது வேலை செய்யும்போது, என் மகள் என்னிடம் பல வேலைகளைச் செய்யுமாறு சொல்வாள். ஆனால், பிரேம்ஜி தம்பி உடனே, அதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்ய சொல்லுற என்று கோபப்படுவார். அந்த அளவுக்கு தங்கமானவர். அவர் எனக்கு இன்னொரு மகன் என்று மாமியார் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.