திருமண பேச்சு போகும் சமயத்தில் நடிகை புகைப்படத்திற்காக வழியும் நடிகர்.. என்ன ஜி இதெல்லாம்..
கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம்.
42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டு காமெடியான ரியாக்ஷனை கொடுத்த வண்ணமாக இருந்து வந்தார்.
பிரேம்ஜி, வினைதா சிவகுமார் என்ற பாடகியுடன் சமீபத்தில் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை பார்த்த சிலர் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா என்ற கேள்வியை எழுப்பி வைரலாக்கினர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டே படுத்தபடி டிசர்ட்டுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து பிரேம்ஜி இதயம் வெடித்தது போன்ற நாயகன் கமல் கொடுக்கும் ரியாக்ஷனை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கடுமையான வார்த்தையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) August 29, 2022