இந்த நடிகைகளையும் விட்டுவைக்காத 40 வயது நடிகர்.. பெரிய மனுஷன் பண்ற வேலையா இது

Kalyani Priyadarshan Premji Amaren
By Edward Sep 16, 2022 08:57 AM GMT
Report

இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரேம்ஜி அமரன். அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராகவும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் பிரேம்ஜி.

சமீபத்தில் மங்கத்தா, பிரியாணி, மாநாடு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். 40 வயதுக்கும் மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வரும் பிரேம்ஜி, இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து எதாவது ஒரு கருத்தினை ஏடாகுடமாக பதிவிட்டு வருவார்.

அதேபோல் நடிகைகள் போடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் ஜொள்ளுவிட்டும் ரீப்ளே செய்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, சங்கர் மகள் அதிதியை தொடர்ந்து இளம் நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் கல்யாணி பிரியதர்ஷன் போன்ற நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் முதல் கல்யாணம் பண்ணுங்க என்றும் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.