பிரேம்ஜியுடன் 2 வருஷ காதல்..வீட்டில் அடம்பிடித்து வேறு வழியில்லாமல் பண்ணி வெச்சாங்க!! மனைவி இந்து ஓப்பன் டாக்..

Premji Amaren Gossip Today Marriage
By Edward Nov 27, 2024 03:30 AM GMT
Report

பிரேம்ஜி - இந்து

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பாடகராகவும் திகழ்ந்து வரும் பிரேம்ஜி அமரன், 44 வயதான நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் குறித்து இருவரும் பேட்டியளித்து வரும் நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு தங்களின் காதல் குறித்து பேசியுள்ளார்.

அதில், நான் சேலத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் பேங்கில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் பிரேம்ஜியை பார்த்து, இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்தோம்.

பிரேம்ஜியுடன் 2 வருஷ காதல்..வீட்டில் அடம்பிடித்து வேறு வழியில்லாமல் பண்ணி வெச்சாங்க!! மனைவி இந்து ஓப்பன் டாக்.. | Premgi Wife Indhu Interview About 2Year Love Story

வீட்டில் பிரச்சனை

இருவரும் 2 வருடமாக காதலித்து வந்தது ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் தெரியும். நாங்க வெளியில் போயிருக்கோம், ஆனால் யாருமே எங்களை கண்டுபிடிச்சதே இல்லை. பிரேம்ஜி சிங்கிள் என்று சொல்லிட்டு இருந்ததாலும் அவர்மீது ரசிகர்கள் ரொம்ப நம்பிக்கை வைத்ததாலும் எங்களுடைய லவ் 2 வருடமா யாருக்குமே தெரியவில்லை.

பின் கல்யாணம் என்று வரும்போது எங்க வீட்டில் ரொம்ப பிரஷர் இருந்தது. சினிமா ஃபேமிலி வேண்டாம் என்று சொன்னாங்க, காதலிச்சா ஒரு குடும்பத்தில் என்ன என்ன பிரச்சனை வருமோ அது எல்லாமே நடந்தது. ஆனால் நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி எங்கள் வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். இப்போது எங்க குடும்பத்தில் இவரை ரொம்பவே பிடித்துவிட்டது என்று இந்து தெரிவித்துள்ளார்.