பிரேம்ஜி அப்படி ஆகவிடாமல் கெடுத்தது யுவன் தான்.. உண்மையை கூறிய இயக்குநர்..
தமிழ் சினிமாவில் டாப் இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் வெங்கட் பிரபு தளபதி விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து கோட் படத்தினை இயக்கியுள்ளார்.
கோட் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினருடன் வெங்கட் பிரபு கலந்து கொண்டு வருகிறார்.
பிரேம்ஜி மியூசிக் டைரக்டர்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் தம்பி பிரேம்ஜி பற்றிய ரகசியத்தை கூறி ஷாக் கொடுத்துள்ளார். நான் ஆகட்டும், யுவனாகட்டும், கார்த்திக் ராஜாவாகட்டும், பிரேம்ஜி மியூசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை. அதை கெடுத்ததே யுவன் சங்கர் ராஜா.
வல்லன் படத்தில் சிம்பு தான் பிரேம்ஜியை நன்றாக நடிக்கிறான் என்று கூறி நடிக்க வைத்தார். சென்னை 28ல் சீனு கேரக்டரில் இவனுக்கு பதிலாக என் நண்பரை தான் தேர்வு செய்தோம். ஆனால் ஆடிஷனில் சொதப்பியதால் தமனை நடிக்க முடிவு பண்ணோம்.
ஆனால் அவன் வெளிநாட்டு கச்சேரிக்கு சென்றுவிட்டான். அப்போது தான் பிரேம்ஜியை ஆடிஷனே பண்ணாமல் நடிக்க வைத்தோம். எப்போது இவனை மியூசிக் டைரக்டராக்கலாம் என்று பிளான் பண்ணினோம்.
அப்படி எல்லோரும் பேசி அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டோம். இவன் (பிரேம்ஜி) என் படத்தில் நடிக்கவில்லை என்றால் என் படத்தில் மியூசிக் பண்ணலாம், அப்படி நடிச்சான் என்றால் யுவன் மியூசிக் பண்ண வேண்டும் என்று பிளான் இருந்தது என்று பிரேம்ஜி இருக்கும் போது காமெடியாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.