ஜிம் ஒர்க்கவுட் கொடுத்தார் என்று சொன்ன நடிகை பிரியா ஆனந்த்!! மோசமான கேள்வி கேட்ட நபர்..

Prashanth Thiagarajan Priya Anand Gossip Today Andhagan
By Edward Aug 17, 2024 10:02 AM GMT
Report

நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமணன் படத்தில் கதாநாயகியாகி பிரபலமான நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்த பிரியா ஆனந்த் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்தகன் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பிரியா ஆனந்த் கலந்து கொண்டு பேசிய போது, பெசன்ட் ரவி இரண்டு நாட்களுக்கு முன் ஜிம் ஒர்க்கவுட் சொல்லி கொடுத்ததில் இப்போது வரை இடுப்பு வலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஜிம் ஒர்க்கவுட் கொடுத்தார் என்று சொன்ன நடிகை பிரியா ஆனந்த்!! மோசமான கேள்வி கேட்ட நபர்.. | Priya Anand Upset Irritating Questions Andhagan

இதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர், பிரியா ஆனந்த்க்கு இடுப்பு வலி எடுத்ததை போல் பிரசாந்த் சார் உங்களுக்கு அப்படி இடுப்பு வலி வந்ததா என்று கேட்டதும், சில சமயத்தில் ஏன் தமிழ் தெரிந்தது என்று தோன்றுகிறது என்று பிரியா ஆனந்த் புலம்பி இருக்கிறார்.

இதனை கேட்ட தியாகராஜன், பொம்பளைங்க உடற்பயிற்சி செய்யும் போது இடுப்பு வலி வரும், ஆண்கள் செய்தால் வராது, உடல் வலி தான் இருக்குமே தவிர வேறு எந்த வலியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

பின் பெசன்ட் ரவி, பத்திரிக்கையாளரை பார்த்து, நீங்களும் வாங்க ஜிம் ஒர்க்கவுட் செய்யலாம் என்றும் எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.