எப்பவுமே தலை நிமிர்ந்து தான் நடக்குறேன்!! பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடி..

Arulnithi Priya Bhavani Shankar Gossip Today Tamil Actress
By Edward Aug 16, 2024 12:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

எப்பவுமே தலை நிமிர்ந்து தான் நடக்குறேன்!! பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடி.. | Priya Bhabani Shankar Reply Fans Wishes Demonte2

இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது என்று கூறியிருந்தார். தற்போது அவர் நடித்த டிமான்ட்டி காலணி 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் தொடர் தோல்வியடைந்து வந்ததை அடுத்து பலர் அவரை ராசியில்லா நடிகை என்றெல்லாம் விமர்சித்து பேசி வந்தனர். தற்போது இந்த வெற்றியை தொடர்ந்து பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் பலர் பாராட்டி சமுகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எப்பவுமே தலை நிமிர்ந்து தான் நடக்குறேன்!! பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடி.. | Priya Bhabani Shankar Reply Fans Wishes Demonte2

அதில் ஒரு நபர், டிமான் ட்டி காலணி 2 பாசிட்டிவ் விமர்சனம், தலை நிமிர்ந்து நடங்க ப்ரியா நீங்க நடிச்ச படம் ஹிட் ஆகிவிடுச்சு என்று கூறியிருக்கிறார். இதற்கு பிரியா பவானி சங்கர், நான் எப்பவுமே தலை நிமிர்ந்து தான் சார் நடந்துட்டு இருக்கேன், உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.

Gallery