கிளாமராக நடிப்பது மிகவும் கடினம்.. நடிகை பிரியா பவானி பேச்சு

Priya Bhavani Shankar Actress
By Karthick Raja Sep 03, 2024 04:32 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் டிமான்டி காலனி 2. இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட பிரியா பவானி ஷங்கரிடம் கிளாமர் ரோல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

கிளாமராக நடிப்பது மிகவும் கடினம்.. நடிகை பிரியா பவானி பேச்சு | Priya Bhavani Shankar About Acting Glamour Role

இதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர் "கிளாமராக நடித்தால் சீக்கிரமாக பெரிய ஹீரோயின் ஆகிவிடலாம் என கூறமாட்டேன். கிளாமராக நடிப்பது என்பது தான் சினிமாவில் மிகவும் கடினமான விஷயம். அது என்னிடம் இல்லை என்று நான் நினைக்கிறன்.

இப்படி நடிப்பதில் எனக்கு வசதியாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்ப்பது பிடிக்காது என நினைக்கிறன். என்னுடைய வழக்கமான நடிப்பை தான் அவர்கள் விரும்புவார்கள்" என கூறியுள்ளார்.   

கிளாமராக நடிப்பது மிகவும் கடினம்.. நடிகை பிரியா பவானி பேச்சு | Priya Bhavani Shankar About Acting Glamour Role