லட்சத்தில் சம்பளம் வாங்கி கோடியில் ECR பங்களா!! நடிகை பிரியா பவானி சங்கரை பற்றி கூறிய பயில்வான்

Priya Bhavani Shankar Bayilvan Ranganathan
By Edward Dec 06, 2022 07:15 AM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை, மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், குறுதிஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

லட்சத்தில் சம்பளம் வாங்கி கோடியில் ECR பங்களா!! நடிகை பிரியா பவானி சங்கரை பற்றி கூறிய பயில்வான் | Priya Bhavani Shankar Ecr House Bayilvan Open

லட்சத்தில் சம்பளம்

தற்போது இந்தியன் 2, ருத்ரன், அகிலன், டிமாண்டி காலணி 2, போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினாலும் அப்படங்களில் முக்கிய ரோல் இல்லாமல் தான் நடிக்கிறார். ஒருசில படங்களை தவிர பிரியா பவானி சங்கர் இரண்டாம் மூன்றாம் ஹீரோயினாகத்தான் நடித்து வந்தார். அதிலும் லட்சத்தில் தான் சம்பளம் பெற்று வந்தாராம். இதன்பின் கமிட்டாகிய படங்களை தாண்டி இனிமேல் தனக்கு முக்கியத்துவம் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

லட்சத்தில் சம்பளம் வாங்கி கோடியில் ECR பங்களா!! நடிகை பிரியா பவானி சங்கரை பற்றி கூறிய பயில்வான் | Priya Bhavani Shankar Ecr House Bayilvan Open

இந்நிலையில் இப்படி லட்சத்தில் சம்பளம் வாங்கி ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கி வைத்திருந்தார். தற்போது 18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது. கனவோடு காலெடி எடுத்து வைக்கிறோம் என்று தன் காதலருக்கு முத்தம் கொடுத்த படி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்

ஈசிஆர் பகுதியில் நிலமே கோடிக்கணக்கில் இருக்கும் போது லட்சத்தில் வாங்கும் ஒரு நடிகை எப்படி பங்களா வாங்கி குடிப்போக முடியும் என்று பயில்வான் ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன் விமர்சித்து இருந்தார். ஆனால் பிரியா பவானி சங்கர், விளம்பரப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், படங்கள் போன்றவற்றில் நடித்து அதில் வாங்கிய தொகையை சேர்த்து வைத்துதான் இதை கட்டியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

GalleryGallery