44 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! அக்கடதேசத்திற்கு குறி வைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Tamil Actress Actress
By Edward Aug 12, 2023 08:15 AM GMT
Report

தமிழுக்கு டாட்டா காட்டி அக்கட தேசத்தை குறி வைத்த பிரியா பவானி சங்கர்!! விரக்தியில் இப்படியொரு முடிவா.. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை படத்திற்கு பின் வெள்ளித்திரையில் அறிமுகமாகி கதாநாயகியாக வளம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் அவருக்கு சரியான வரவேற்பும் கதாபாத்திரமும் அமையாமல் இருந்து வந்தார்.

இந்தியன் 2, டிமான்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்கள் வரிசையில் இருந்தாலும் தமிழில் சரியான படம் அவருக்கு அமையாமலே இருந்து வருகிறது.

44 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! அக்கடதேசத்திற்கு குறி வைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Join Forces With Gopichand

சமீபத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கல்யாணம் கமனீயம் என்ற படத்தில் நடித்திருந்தார். படம் ஓரளவிற்கு ஓடிய நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கிறார்.

இயக்குனர் ஹர்ஷா இயக்கும் கோபிசந்தின் 31வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். சத்யசாய் ஆர்ட்ஸ் கேகே ராதாமோகன் தயாரிப்பில் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கவுள்ளார்.

பீமா என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரியா பவானி சங்கருடன் நடிகை மாளவிகா சர்மா இரண்டாம் நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடிக்கவுள்ளது.