அந்த விசயத்துக்கு நான் அடிமையாகி இருக்கேன்!! நடிகை பிரியா பவானி சங்கர் ஓப்பன்
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் அவர் நடிப்பில் பொம்மை படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி, சமீபத்தில் நடந்த சர்வதேச போதைப்பொருள் தடுப்பு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஆண்டுதோறும் நடப்பெற்றும் இந்நிகழ்ச்சி ஜூன் 25 ஆம் தேதி சென்னை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூடியூபர், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், எதற்கு நீங்கள் அடிமை என்ற கேள்விக்கு, சாப்பாடு தான் என்று கூறியிருக்கிறார்.
பலவித சாப்பாட்டுக்களை தேடி பார்த்து சாப்பிடுவேன். பிரியாணி தான் சூப்பர் ஸ்டார் உணவாக இருக்கிறது எனக்கு என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.