மோசமானவரை நம்பி ஏமாந்து போனேன்.. வேதனையில் கண் கலங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர்.
இவர் 2017 -ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் அகிலன், ருத்ரன், பத்து தல, டிமான்டி காலனி, இந்தியன் 2 போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர், ராஜவேலன் என்பவரை காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே அவரை காதலித்து வருவதாக பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் இவர், சோசியல் மீடியா பக்கத்தில் அவரின் காதலனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
ஏமாந்து போனேன்
இந்நிலையில் பிரியா பவானி சங்கர், "நான் ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருந்தேன். அந்த நபர் மோசமானவர் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். நான் யார் சொல்லியும் கேட்காமல் கடைசியில் அவரை நம்பி ஏமாந்துவிட்டேன்" என்று கண்கலங்கி கூறியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் அவர் காதலன் ராஜவேலனை குறித்து சொன்னாரா இல்லை இவருக்கு வேறு காதல் இருந்ததா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.