ரஜினி, கமல் நடிச்சா மட்டும் அந்த படம் ஓடுமா!! கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியன் 2 நடிகை..

Priya Bhavani Shankar Gossip Today Indian 2
By Edward Aug 13, 2024 03:33 AM GMT
Report

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக அறிமுகமாகி, அதில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி சினிமா வாய்ப்பு பெற்று மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படமும் மிகப்பெரியவில் மோசமான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ரஜினி, கமல் நடிச்சா மட்டும் அந்த படம் ஓடுமா!! கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியன் 2 நடிகை.. | Priya Bhavani Shankar Speech Indian 2 Trolls

அப்படத்தில் பலர் நடித்த நிலையில் பிரியா பவானி சங்கரை மட்டும் குறிப்பிட்டு ராசி இல்லாத நடிகை என்று கலாய்த்து வந்தனர். தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து பிரியா பவானி சங்கர், சினிமா என்பது ஒரு ஆள் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை.

ரஜினி, கமல் நடிச்சா மட்டும் ஒரு படம் ஓடாது, மேயாத மான் ஹிட்டான போது அது உங்களுக்கு பிடிக்கலன்னா சாரி, ஆனால் ஆயிரம் பேர் சேர்ந்து வேலை பார்க்கிற ஒரு படத்தை ஒரு ஆளாள பிளாப் ஆயிடுச்சின்னு சொல்றது ரொம்ப பிற்போக்குத்தனமான ஒன்று என்று கூறியிருக்கிறார். விமர்சனத்தை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ரஜினி, கமல் நடிச்சா மட்டும் அந்த படம் ஓடுமா!! கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியன் 2 நடிகை.. | Priya Bhavani Shankar Speech Indian 2 Trolls

எல்லோரும் மனுஷங்கதான், உங்களை கஷ்டபப்படுத்துகிற மாதிரி பேசினால் உங்களுக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ அதுபோலத்தான் நடிகர்களுக்கும் கஷ்டமாக இருக்கும்.

பட விமர்சனம் பற்றிய கவலையில்லை, நெகட்டிவ் ஆக இருந்தாலும் பாசிட்டிவ் ஆக இருந்தாலும் அது விமர்சனம். டிஜிட்டல் மீடியாவில் முகமெ தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் சிமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.