யாரோட போட்டோ எடுத்தாலும் அவங்களோட போயிடுவேனா!! கொந்தளித்த நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Indian 2 Tamil Actress Actress
By Edward Aug 07, 2024 11:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

யாரோட போட்டோ எடுத்தாலும் அவங்களோட போயிடுவேனா!! கொந்தளித்த நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Talks About Love Rumours

இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் என்று டிமாண்டி காலணி 2 படத்தின் பிரமோஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் வதந்தி செய்திகளையும் மற்ற நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசுவது குறித்தும் பேசியிருக்கிறார். ஹேப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும், எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையே காதல் என்று எழுதுறாங்க. ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வனுடன் எடுத்த போட்டோ போட்டால் அப்படி பேசுறாங்க.

யாரோட போட்டோ எடுத்தாலும் அவங்களோட போயிடுவேனா!! கொந்தளித்த நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Talks About Love Rumours

நல்ல வேலை இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது. யாரோட போட்டோ எடுத்து போட்டாலே அவங்களோட போயிடுவேன்னு எப்படித்தான் நினைக்கிறார்களோ, ரொம்பவே மோசமான கமெண்ட்டுகளை போடுறாங்க மனசு தாங்கமாட்டுது என்று புலம்பி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.