வாங்குறது லட்சத்தில் சம்பளம்? கோடியில் ஈசிஆரில் பங்களா வாங்கிய நடிகை!!

Priya Bhavani Shankar Indian Actress
By Jai Jun 16, 2022 09:15 AM GMT
Report

சினிமாவில் ஒருசில நடிகைகள் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலங்களாக முன்னேறி கோடியில் சம்பளம் வாங்கும் அளவிற்கு தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அப்படி செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் பணியாற்றி அதன்பின் சின்னத்திரை நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அறிமுகமாகிய படங்கள்

இந்த சீரியலில் கிடைத்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திய பிரியா மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் மான்ஸ்டர், ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யாவுடன் இரண்டாவது முறையாக பொம்மை படத்தில் நடித்துள்ளார்.

அதன் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ஒரு படத்திற்காக சுமார் 20 லட்சம் வரை சம்பளமாக பிரியா பவானி சங்கர் பெற்று வருகிறாராம்.

லட்சத்தில் புரளும் நடிகை

அப்படி இருக்கையில் ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கி இருப்பதாக பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் சமீபத்தில் கூறியுள்ளார். வெறும் 4 , 5 படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்தும் சில படங்களிலும் நடித்து வரும் பிரியாபவானி சங்கர் கோடியில் பங்களா வாங்கியது பல நடிகைகளை வாய்ப்பிளக்க வைத்துள்ளதாம்.