நடிகர் பிரஷாந்த் போல் மாறிய நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.. அந்த ரகசியம் தெரியுமா
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் ஒரே நாள் இரவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இப்படத்திற்கு பின் திரையுலகில் பட வாய்ப்புகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு நடிகர் நித்தினுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்களை கொண்ட இவர், தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவு செய்து, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் இவர் ,மது குடிப்பது போலவும் புகைபிடிப்பது போலவும் புகைப்படங்களை பதிவு செய்ததால், படக்குழுவுக்கு எதிராகவும் நடிகை பிரியா வாரியருக்கு எதிராகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் நடிகை பிரியா வாரியாரின் சமூக வலைதள கணக்கை முழுவதுமாக முடக்கிவிட்டனர். சமீபத்தில் தான் மீண்டும் இவரது சமூக வலைதள கணக்கு மீண்டும் வந்தது. இதனால் மீண்டும் புகைப்படங்களை பதிவு செய்த நடிகை பிரியா வாரியாருக்கு ரசிகர்களுக்கு செம ஆப் அடித்துள்ளனர்.
ஆம், நடிகை பிரியா வாரியார் வெளியிட்டுள்ள புகைப்படத்தோடு காமெடி நடிகர் வையாபுரியின் லேடி கெட்டப் புகைப்படங்களையும், நடிகர் பிரசாந்தின் லேடி கெட்டப் புகைப்படங்களையும் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அதை நீங்களே பாருங்க..

