நடிகையின் போலிஸ் ஆடையை கலாய்த்த நடிகர்! அந்த புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்..
பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி. கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அவர் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலெடி எடுத்து வைத்தார்.
முதல் படமே நல்ல ஹிட் கொடுத்த நிலையில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மனப்பெண்ணே,ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யாவுடன் இரண்டாம் முறை பொம்மை என்ற படத்திலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் அகிலன் படத்தில் நடித்தபோது போலிஸ் ஆடையணிந்ததை பதிவிட்டு, இந்த வார இறுதியில் என்ன செய்யலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு காமெடி நடிகர் சதீஷ், அந்த ஸ்டேஷன்ல அரஸ்ட் ஆகுறது என்று காமெடியான பதிலை கூறியுள்ளார். இதறு பதிலளித்த பிரியா, வாங்க சதீஷ் என்று கூறியதோடு, பொருக்கி பெண் போலிஸ் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலர் சதீஷ் அண்ணா உங்களுக்கு திருமணமாகிடுச்சி? என்று கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.