என் பையனையும் டிடியும் ஒண்ணா சேர்த்து வச்சி தப்பா பேசுறாங்க!! குடும்ப ரகசியத்தை உடைத்த பிரியதர்ஷினி
விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் vj டிடி. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இதையடுத்து டிடியின் இரண்டாம் திருமணம் பற்றி பல வதந்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியதர்ஷினி, அவரது தங்கை டிடியின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், டிடிக்கு அடுத்த திருமணம் எப்போது என்று எல்லோருமே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமணம் அவருடைய மனம் சார்ந்தது. நாங்கள் கட்டாயப்படுத்தி அதை பண்ணு என்று சொல்ல முடியாது. மேலும் அவர் பேசுகையில், என்னுடைய மகனும் டிடியும் வெளியே செல்லும் போது சிலர் டிடி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார், அந்த நபர் இவர் தான் என்று புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த மாதிரி பதிவுகளை பார்க்க கடுப்பாக இருக்கிறது.
ஏதாவது நல்ல விஷயம் என்றால் நாங்களே சொல்லுவோம். ஆனால் இணையத்தில் பல பொய்யான தகவல்கள் வெளிவந்து வருகிறது. அதைஎல்லாம் பார்த்து கஷ்டப்பட்டால் வேலைக்கு ஆகாது என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.