என்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்..பிரியா மணி ஆவேசம்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் பிரியா மணி. இவர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.
பிரியா மணி கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
பிரியா மணியின் கணவர் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
சமீபகாலமாக தன் கணவரின் முதல் மனைவியால் பிரியா மணி விவாகரத்து செய்ய போகிறார் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா மணி, எனக்கும் என் கணவருக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.
என் திருமணம் வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அது எல்லாம் பொய். நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.