பிரியாமணி படுக்கையறை காட்சியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் இது தானாம்!.. அவரே கூறிய பதில்
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பிரியா மணி. இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை என்ற பிரிவில் தேசிய விருது கிடைத்தது.
இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி எனப் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
பிரியா மணி கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிரியா மணி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் நடிக்கும் படங்களை என்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் பார்ப்பார்கள். அவர்கள் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது என்பதற்காக தான் நான் படுக்கையறை காட்சி மற்றும் நெருக்கமாக காட்சியில் நடிக்கவில்லை.
எனக்கு இன்னொரு ஆண் உடன்முத்தம் கொடுக்க நான் விரும்பவில்லை. இது போன்ற காட்சியில் நடித்தால் கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.