ஆண்களுக்காக கொட்டிக்கொடுக்குறாங்க!! சம்பள விசயத்தில் கடுப்பாகிய நடிகை பிரியங்கா சோப்ரா..

Bollywood Indian Actress Priyanka Chopra
By Edward Dec 12, 2022 02:08 PM GMT
Report

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படத்தினை அடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து பின் தொடர் வெற்றிப்படங்களால் முன்னணி நடிகையாக மாறினார்.

இதன்பின் முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடியாக நடித்து ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்தார். அப்படி இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக டாப் 10 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

ஆண்களுக்காக கொட்டிக்கொடுக்குறாங்க!! சம்பள விசயத்தில் கடுப்பாகிய நடிகை பிரியங்கா சோப்ரா.. | Priyanka Chopra About Actors Salary

சமீபத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பதாகவும் அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் தான் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

சம்பள விசயத்தில் கூட ஆண் பெண் பாகுபாடு இருப்பதாகவும் நாங்கள் நடிகர்களுக்கு இணையாக சம்பளமும் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆண் நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு எப்போது வருகிறார்கள் அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆனால் நடிகர்களோ அவர்களுக்கான நேரத்தில் வந்து விட்டு சென்றுவிடுவார்கள். எப்போது ஷூட்டிங்கிற்கு வரவேண்டும் என்பதும் அவர்களின் முடிவாகத்தான் இருக்கும் என்று சரமாறியாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.