இருவரும் இப்படி இருப்பதுதான் எந்தவொரு உறவையும் வலுப்படுத்தும்.. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்
Priyanka Chopra
By Karthick Raja
இந்திய சினிமாவையும் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், தனது கணவர் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியது வைரலாகி வருகிறது.

இதில், "வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த இருவர் இணையும் போது, ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிப்பது மிகவும் முக்கியம். இந்திய கலாச்சாரத்தின் மீது ஜோன்ஸுக்கு இருந்த மரியாதைதான் எங்களது உறவின் முக்கிய அஸ்திவாரம்.
ஒருவேளை அவர் எனது நாட்டையும் கலாச்சாரத்தையும் நேசிக்காமல் இருந்திருந்தால், நான் அவரை காதலித்திருப்பேனா என எனக்கு தெரியவில்லை. அன்பாகவும் பரிவாகவும் இருவரும் இருப்பதுதான் எந்தவொரு உறவையும் வலுப்படுத்தும்" என பிரியங்கா சோப்ரா கூறினார்.
