பாலிவுட்டில் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன்..அதனால்தான்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்..

Bollywood Indian Actress Priyanka Chopra Hollywood Varanasi movie
By Edward Feb 24, 2026 05:45 AM GMT
Report

தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து தற்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் நடிகையாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன்..அதனால்தான்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்.. | Priyanka Chopra Moving Bollywood To Hollywood

உலக அழகி பட்டம் பெற்றப்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறிய நடிகை பிரியங்கா சோப்ரா, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், பாலிவுட் டூ ஹாலிவுட் சென்றது குறித்து பேசியுள்ளார். அதில், பாலிவுட்டில் இருந்து நான் வெளியேறுவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் பாலிவுட்டில் நான் நடித்தபோது பல காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் என் கரியரை மேம்படுத்த விரும்பினேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகம் தரும் வாய்ப்புகளை தேடினேன்.

பாலிவுட்டில் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன்..அதனால்தான்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்.. | Priyanka Chopra Moving Bollywood To Hollywood

அமெரிக்காவிற்கு சென்று நடிக்கத் தொடங்கினேன். இப்போது கிட்டத்தட்ட 12 ஆண்டுக்கு பின் அற்புதமான படைப்புகளை தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலை காண்கிறேன். அது எளிதானதல்ல. எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும், வாரணாசி மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. நான் 2 உலகங்களையும் கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். 2 துறையிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாச்சாரங்களை போல, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.