ஒரு ஷோ-க்கு லட்சத்தில் சம்பளம்!! 33 வயதாகும் VJ பிரியங்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில், வசி என்பவரை திடீரென விமரிசையாக திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவி பிரபலங்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜே பிரியங்கா, ஏப்ரல் 28ஆம் தேதி 33 வயதை எட்டியுள்ளார். திருமணத்திற்கு பின் அவர் கணவர் வசியுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சொத்து மதிப்பு
தற்போது பிரியங்காவின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டிற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம். குக் வித் கோமாளி 5 சீசனுக்கு மட்டும் ஒரு எபிசோட்டிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
டைட்டில் வின்னரானதால் அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் பிக்பாஸ் சீசன் 5ல் 15 வாரம் இருந்த பிரியங்கா ரூ. 30 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். மேலும் யூடியூப், விளம்பரங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அதிலும் சம்பாதித்து வருகிறார்.
அப்படி அவர் சம்பாதித்ததில் ரூ. 10 கோடி முதல் ரூ. 13 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.