மாகாபா ஆனந்தை கழட்டுவிட்டு பிக்பாஸ் ராஜுவுக்கு ரூட்டை போட்ட பிரியங்கா? ரம்யா கிருஷ்ணன் கொடுத்த சர்ப்ரைஸ்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா. கல்லூரியில் மாகாபா ஆனந்தை பார்த்து வாய்ப்பு கேட்டு அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பிரியங்காவோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
அதன்பின் தன் காமெடி திறமையாலும் பேச்சாலும் மாகாபா ஆனந்துடன் பல நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து வழ்ங்கி வருகிறார்கள். சமீபத்தில் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் பிரியங்கா.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிகருடம் நடன இயக்குனருமான சதீஷும் பங்கேற்றுள்ளனர்.
எப்போது தொகுப்பாளர்கள் தான் நடுவர், போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி மேடைக்கு வரவழைப்பார். ஆனால் இந்த முறை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி மேடைக்கு அழைத்துள்ளார்.
எப்போது மாகாபாவுடன் இணைந்து பணியாற்றி வந்த பிரியங்கா இந்நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்தை கழட்டி விட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிக்பாஸ் நண்பரான ராஜு பாயுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் பிக்பாஸ் தோழர் என்றாலும் மாகாபாவுடன் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் உங்களுக்கு செட்டாகும் பிரியங்கா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
