அதற்காக பிரியங்கா மோகனுடன் இணையும் தனுஷ்.. சமந்தா, தமன்னா வரிசையில் இவரா

Dhanush Priyanka Arul Mohan Samantha Tamannaah
By Kathick Aug 27, 2024 05:30 AM GMT
Report

பிரியங்கா மோகன்

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். இவர் தெலுங்கு நாணி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் பிரபலமானார். பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார்.

அதற்காக பிரியங்கா மோகனுடன் இணையும் தனுஷ்.. சமந்தா, தமன்னா வரிசையில் இவரா | Priyanka Mohan Doing Dance Number In Dhanush Movie

இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இந்த ஆண்டு துவக்கத்திலேயே வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார்.

சமந்தா, தமன்னா வரிசையில் இவரா

தனக்கென்று ஒரு தனி இடத்தை தென்னிந்திய சினிமாவில் பிடித்து வைத்திருக்கும் இவர் தற்போது ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடவுள்ளார்.

அதற்காக பிரியங்கா மோகனுடன் இணையும் தனுஷ்.. சமந்தா, தமன்னா வரிசையில் இவரா | Priyanka Mohan Doing Dance Number In Dhanush Movie

ஆம், தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார். அதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அதற்காக பிரியங்கா மோகனுடன் இணையும் தனுஷ்.. சமந்தா, தமன்னா வரிசையில் இவரா | Priyanka Mohan Doing Dance Number In Dhanush Movie

புஷ்பா படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியது, அப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அதே போல் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் நடனம் அப்படத்திற்கு ப்ரோமோஷனுக்கு பெரிதும் கைகொடுத்தது. அவர்களின் வரிசையில் தற்போது பிரியங்கா மோகனும் இணைந்துள்ளார்.