என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்களா..கடுப்பான பிரியங்கா மோகன்

Priyanka Arul Mohan
By Dhiviyarajan Feb 02, 2024 02:30 PM GMT
Report

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன்.

தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்களா..கடுப்பான பிரியங்கா மோகன் | Priyanka Mohan Open Talk

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோனிடம், நீங்கள் சினிமா வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவம் எது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர், நான் இப்போதுதான் சினிமாவில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதற்குள் சினிமாவில் மோசமான அனுபவம் என்று கேள்வி கேட்டால், நான் என்ன பதிலை சொல்ல முடியும்? என் கேரியரை முடிக்கப் பார்க்கறீங்களா என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.