36 வயது நடிகருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. யார் அந்த நடிகர் தெரியுமா
Priyanka Arul Mohan
Vijay Deverakonda
By Kathick
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் சென்ற ஆண்டு சரிபோதா சனிவாரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
ஆனால், தமிழில் வெளியான பிரதர் படம் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிரியங்கா மோகனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய 14வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.
மேலும் முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.