வினய் - பாவம்பா அந்த பொண்ணு..எப்பவும் பிரியங்காவையே வம்புக்கு இழுக்குற!
தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி பிரபலமாகுபவர்கள் வரிசையில் எண்ட்ரி கொடுத்தவர் பிரியங்கா அருள் மோகன். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து போட்டோஷூட் மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தன்னுடைய ஈர்க்கும் குரலாலும் பேசி டாக்டர் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கமிட்டாகி நடித்தார். சமீபத்தில் அப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா மோகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர்169வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா மோகன் குறித்த சில மீம்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாக்டர் படத்தில் வில்லனாக நடித்த வினய் அவரை அடுத்தது போல் எதற்கும் துணிந்தவன் படத்திலும் கொடுமைப்படுத்துவார். இதை வைத்து அந்த பொண்ணையே வம்புக்கு இழுக்கிற என்ற மீம்ஸ் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.