நடிகை பிரியங்கா மோகனின் வாழ்க்கையை மாற்றிய சிவகார்த்திகேயன்.. அவர் கூட நடிச்சா இப்படி நடக்குமா
Sivakarthikeyan
Priyanka Arul Mohan
By Kathick
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் மூன்று திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் கோலிவுட் திரையுலகின் பிசியாக கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை பிரியங்கா மோகன் வாங்கி வருகிறார். இதற்க்கு காரணமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த இரு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் ஆனது தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.