திருமணமான 3 வருடத்தில் விவாகரத்து.. வெயில் பட நடிகை பிரியங்காவின் 8 வயது மகனை பாருங்க
தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தாவினார்.
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார்.தற்போது மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும்.
தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2015ஆம் ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டு, பிரிந்துவிட்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது 8 வயது மகனுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

