நடிகை ராஷ்மிகாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும்.. எம்எல்ஏ காட்டம்
Rashmika Mandanna
By Yathrika
ராஷ்மிகா
கன்னடத்தில் Kirik Party படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் ராஷ்மிகா மந்தனா. அங்கு 2, 3 படங்கள் நடித்தவர் அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கும் மாஸ் ஹிட் படங்கள் கொடுத்தார்.
தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்தவர் ஹிந்தி பக்கம் சென்று அனிமல், சாவா என்ற ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.
இப்படி பிஸியாக படங்களில் நடித்து வரும் இவர் கர்நாடகாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு வர ஆர்வம் காட்டவில்லையாம், பலமுறை அவரை அணுகியும் வர மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து தனது பயணத்தை தொடங்கியலர் இங்கு நடக்கும் ஒரு விழாவிற்கு வர மறுத்தது கண்டனத்திற்குரியது. அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிகுமார் கவுடா காட்டமாக பேசியுள்ளார்.