ஆணவத்தில் ஆடுகிறாரா நடிகர் கவின்!! புலம்பித்தள்ளும் பட தயாரிப்பாளர்..

Kavin Gossip Today Tamil Actors
By Edward Mar 09, 2024 04:45 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த கவின், சத்ரியன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு ரோலில் நடித்தும் வந்தார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

ஆணவத்தில் ஆடுகிறாரா நடிகர் கவின்!! புலம்பித்தள்ளும் பட தயாரிப்பாளர்.. | Producer Complaint About Kavin Bad Behaviour

அதன்பின் லிஃப்ட், டாடா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். படிபடியாக வளர்ந்து வரும் கவின் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டியில் கவின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதில், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த நடிகர் கவின் கிடையாது என்றும் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது வந்தும் அவரது வேனில் நீண்ட நேரம் இருக்கிறார் என்றும் சரியான நேரத்திற்கு வருவதும் கிடையாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் சரியாக வரவில்லை என்பதால் மற்ற நடிகர்களின் காட்சிகளை முடித்துவிட்டு அவருக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக புலம்பியிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அடுத்த சிம்புவாக உருவெடுக்கிறாரோ என்று விமர்சித்து வருகிறார்கள்.