காசு விசயத்தில் தயாரிப்பாளரை உதைத்த இயக்குனர் அட்லீ.. முகத்திரையை கிழித்த பிரபல தயாரிப்பாளர்..

Gossip Today Atlee Kumar
By Edward Mar 22, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் படும் அவலத்தை பற்றி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பேட்டிக்கொடுத்தும் பல விசயங்களை கூறி வருபவர் தயாரிப்பாளர் கே ராஜன்.

சமீபத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கே ராஜன் பேசியுள்ளார். அப்போது அட்லீ தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உறிஞ்சுவார் என்று மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக் தே இந்தியா படத்தின் காப்பி தான் பிகில் படம் என்றும் அதில் ஹாக்கி விளையாட்டு, பிகில் படத்தில் கால்பந்து அவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி இரு கதையும் ஒன்றுதான்.

அட்லீ தயாரிப்பாளர்களை உதைத்து தள்ளிவிடுவார். நல்லவேளை ஏஜிஎஸ் நிறுவனம் பெரிய நிறுவனம் என்பதால் தப்பித்துக்கொண்டது என்று கே ராஜன் விமர்சித்திருக்கிறார்.

ஏற்கனவே அட்லீ தற்போது இயக்கி வரும் ஜவான் படத்தில் செலவுகளை ஏற்றி ஷாருக்கானுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்து வந்தது.

தற்போது கே ராஜன் இப்படி பேசியதை மேடையில் உட்கார்ந்திருந்த மிர்ச்சி சிவா வாய்விட்டு சிரிக்கமுடியாமல் அடக்கிக்கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.