பிரபல நடிகருக்காக தலைக்கனத்தில் ஆடிய இயக்குனர்!! தலைத்தெறிக்க ஓடிய தயாரிப்பாளர்கள்..

Gossip Today
By Edward Feb 17, 2023 09:32 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் படும் அவலங்களை பற்றி மூத்த தயாரிப்பாளர்கள் பேட்டி கொடுத்து பல உண்மைகளை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி மூத்த தயாரிப்பாளரான ஆனந்தா எல் சுரேஷ் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் பேட்டியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதில் தற்போதைய சினிமாவின் போக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ரொம்ப விபரீதமாக இருக்கிறது. என்னை போல் இருக்கும் சீனியர்ஸ் வருத்தப்படுகிறார்கள்.

அப்படி ஒரு பெரிய நடிகரின் படத்தின் இயக்குனர் வெளிநாட்டில் ஷூட்டிங் வைத்திருக்கிறார். அப்போது தனக்கு 1000 பேர் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்க, 700 பேர் தான் வந்திருக்கிறார்கள் என்று இயக்குனர் அந்த நாள் ஷூட்டை கேன்சல் செய்திருக்கிறார்.

இதனால் 700 பேருக்கு சம்பளமாக தலா 200 யூரோ கொடுக்க வேண்டிதாகியது. அதன்பின்பும் அவர்களை ஓட்டலில் ஒரு நாள் ரெண்டு நாள் தங்க வைத்து ஷூட்டிங் நடக்காமல் இருந்தால் யாருக்கு லாபம்.

அதே நடிகர் அதே இயக்குனர் எடுத்த அடுத்த படமும் ஓடியது, ஆனால் தயாரிப்பாளருக்கு தான் லாஸ். இப்படி இயக்குனர் நடந்து கொண்டால் தயாரிப்பாளர்கள் துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓட தயாராக இருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஆனந்தா எல் சுரேஷ்.

இப்படத்திற்கு பின் அப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த படத்தையும் தயாரிக்க முடியாமல் பல கோடி நஷ்டத்தால் காணாமல் போய்விட்டார்கள் என்று நெட்டிசன்கள் மெர்சல் படத்தினை கூறி கலாய்த்து வருகிறார்கள்.